Sunday, February 1, 2026
HomeKisuKisuமுல்லைத்தீவில் வெள்ளம் ஓடுவதற்காய் களப்பை வெட்ட சென்ற 5 கடற்படை சிப்பாய்கள் பலி!

முல்லைத்தீவில் வெள்ளம் ஓடுவதற்காய் களப்பை வெட்ட சென்ற 5 கடற்படை சிப்பாய்கள் பலி!

முல்லைத்தீவு, சாலையூர் பகுதியில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடிந்து ஓடுவதற்காக அடைபட்ட களப்பை வெட்ட சென்ற ஐந்து கடற்படை சிப்பாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காணாமல் போனதாகத் தேடப்பட்ட ஐவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை, 30ம் திகதி) மதியம் சுண்டிக்குளம் பகுதியில் உள்ள கழிமுகம் அடைபட்டு இருந்ததை அடுத்து வெள்ள நீர் வடிந்து ஓட வேண்டும் என்பதற்காக அதனை வெட்டுவதற்கு கடற்படையின் குழுவொன்று ஈடுபட்டிருந்தது.

திடீரென ஏற்பட்ட துயர நிகழ்வில், இந்த ஐவரும் நீரில் காணாமல் போயுள்ளனர்! இதனை அடுத்து கடற்படையினர் பெரும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். இருப்பினும், இரவு முழுவதும் நீடித்த இந்தத் தேடலின் முடிவு சோகமாகவே முடிந்தது.

இன்று காலை, காணாமல் போயிருந்த அந்த ஐந்து கடற்படை சிப்பாய்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments