கலா ஓயாவில் சிக்குண்ட யாழிலிருந்து சென்ற பேரூந்தில் பயணம் செய்த இளைஞன் ஒருவர் காணமல் போயுள்ளார்.
கடந்த வெள்ளப்பெருக்கில் கலா ஓயா பாலம் அருகே சிக்கியிருந்த பேருந்தில் பயணம் செய்த ஒருவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு அருகிலிருந்த ஒரு கட்டிடத்தின் கூரைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் நொச்சியகம மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த நபரின் பெயர் மருத்துவமனை அனுமதி பட்டியலில் இல்லை.
அவரின் கடைசி தொடர்பு வெள்ளிக்கிழமை மாலையிலான ஒரு தொலைபேசி அழைப்பாகும்; அதன் பின்னர் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சில பயணிகள், அவர்கள் இருந்த கட்டிடத்தின் கூரை ஒரு தருணத்தில் முறிந்ததாகவும் அப்போது சிலரை காப்பாற்றியதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர் வெள்ளநீரில் விழுந்தாரா என்பதில் எந்த உறுதிப்பாடும் இல்லை.
இந்த சம்பவம் தொடர்பாக நொச்சியகம காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. குடும்பத்தினர் மிகுந்த கவலையுடன் தகவல் தேடி வருகின்றனர்.
காணாமல் போன நபர் விவரங்கள்
பெயர்: தனிகசலம் பத்மநிகேதன்
வயது: 36
பாலினம்: ஆண்
📞 யாரேனும் அவரைக் கண்டிருந்தாலோ, ஏதேனும் தகவல் இருந்தாலோ உடனடியாக அவரது சகோதரர்களை தொடர்பு கொள்ளவும்:
0776403113 / 0773863753
Nation trust வங்கியின் யாழ்ப்பாண கிளையில் வாடிக்கையாளர் முகாமையாளராக பணிபுரியும் நிகேதன் என்வரே வெள்ளப்பெருக்கால் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



