இன்று அதிகாலை (25ஆம் திகதி) சரியாக 12.30 மணியளவில், இனந்தெரியாத ஒரு கும்பல் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் உள்ள வீட்டின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்!
அந்தக் கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயற்சித்ததோடு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டுத்தான் பெட்ரோல் குண்டையும் வீசியிருக்கிறார்கள்.
வீட்டுக்காரர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய், உடனடியாகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த இடத்துக்குச் சுன்னாகம் பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் விரைந்து வந்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆனால், யார் இந்தத் தாக்குதலை நடத்தியது? இந்தக் குடும்பத்துக்கும், இந்த ‘இனந்தெரியாத’ கும்பலுக்கும் என்ன பகை? என்பது தான் யாழ் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக இருக்கிறது.



