இண்டைக்கு வெள்ளிக்கிழமை (26) நடந்த அமர்வில ஒரு அட்டகாசமான கிசுகிசு வெளிய வந்திருக்கு. சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்கவுக்கும், பைத்தியர் அர்ச்சுனா எம்.பிக்கும் இடையில் நடந்த கடுமையான வாக்குவாதம்தான் இப்போ யாழ்ப்பாணத்தில பெரிய ஹாட் டாப்பிக்!
வடக்கின் அபிவிருத்தி பத்தி அர்ச்சுனா எம்.பி. சில காரமான கேள்விகளைக் கேட்டிருக்கிறார். ஆனால், அமைச்சர் பிமல் ரத்நாயக்க சரியான பதிலைக் கொடுக்காமல் சிரித்துக்கொண்டே ‘ஜொள்ளியடித்தாராம்’.
அப்போ கோபத்தின் உச்சிக்குப் போன அர்ச்சுனா எம்.பி., “சண்டியன் இல்லாத இடத்தில நொண்டியனும் சண்டியன்தான்! யாழ்ப்பாணம் என்ன உங்களோட வெற்றிலைப் பெட்டியா?” என்று அதிரடியாகக் குத்திக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், “அபிவிருத்தி என்ற பெயரில காணிய பிடுக்காதீங்க! சும்மா கல் நடுறது, ஆட்களை ‘பேய் காட்டுறது’ வேலையெல்லாம் யாழ்ப்பாணத்தில் வைக்க வேண்டாம்!” என்று ஆவேசமா பேசியிருக்கிறார்.
ஆனால், அமைச்சர் இதற்குப் பதிலளிக்காமல், தனது அடுத்த அறிவித்தலை வாசிக்கப் போக, அர்ச்சுனா சபைக்குள்ளேயே கூச்சலிட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்.
இந்தக் கூச்சலில் வெறுப்படைந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சிரிச்சுக்கொண்டே ஒரு பாய்ச்சலைக் காட்டியிருக்கிறார். “நான் பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பேன், ஆனால் ‘பைத்தியக்காரர்களின்’ கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன். தயவு செய்து இடையூறு செய்பவரை வெளியேற்றுங்கோ!” என்று சரவெடியைக் கொளுத்திப் போட்டாராம்.
உடனேயே உடல் நடுங்கிப் போன அர்ச்சுனா எம்.பி. எழுந்து, “என்னை அவர் பைத்தியம் என்கிறார்! அந்தக் வசனத்தை நீக்குங்கள்!” என்று சபாநாயகரிடம் சத்தம் போட்டிருக்கிறார்.
ஆனால், அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடைசி வரைக்கும் அர்ச்சுனாவின் கேள்விகளுக்கோ அல்லது அவரது கோபத்துக்கோ கவனம் கொடுக்காமல் தனது அறிவித்தலை வாசித்து முடித்திருக்கிறார்.

