யாழ்ப்பாணத்துல பல நாளா ஓடிக்கொண்டிருக்கும் தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம், இப்போ பாராளுமன்றத்திலும் சூடு பிடிச்சிருக்கு. அந்தச் சம்பவம் பற்றிய சில இரகசியங்கள் இப்போதான் வெளிய வந்திருக்கு.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேட்ட கேள்விக்கு, புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி கொடுத்த பதில்தான் பரபரப்பா பேசப்படுது.
அமைச்சர் சொன்ன தகவல் என்னன்னா, இந்தத் திஸ்ஸ விகாரை இன்னும் பதிவு செய்யப்படவே இல்லையாம்! அதுமட்டுமில்லாம, இந்த விகாரை இருக்கிற காணியை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக சுவீகரிக்கவும் இல்லையாம். காணி அமைச்சும் அதுக்கான எந்த வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிடலையாம்.
“இந்தக் காணி யாருக்குச் சொந்தம்?” என்ற உண்மை நோக்கத்தை ஆராயத்தான் இப்போ எல்லா வேலையும் நடக்குதாம். ஜனாதிபதி தலையிட்டு பல பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கு. அதோட, இந்தச் சிக்கலைத் தீர்க்கிறதுக்காக ரொஹான் பிரனாந்து தலைமையில ஒரு குழுவும் நியமிக்கப்பட்டிருக்கு.
அமைச்சர் சொன்ன முக்கியமான விஷயம் என்னன்னா, “இந்த தையிட்டிப் பிரச்சினைக்கு உடனடியா தீர்வு காண முடியாது.” காரணம், இது புத்தசாசன அமைச்சும் காணி அமைச்சும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டிய ஒரு பெரிய விவகாரம்!
ஆக மொத்தத்தில், இந்தக் காணிப் பிரச்சினைக்கு இப்போதைக்கு உடனடி முடிவு இல்லையாம். நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை வந்த பிறகே என்ன நடக்கும் என்று தெரியவரும்னு சொல்லி, அமைச்சர் இந்த விவகாரத்துல இருந்து ‘நைஸா’ நழுவிட்டாராம்.
தையிட்டி விகாரையை இடிக்க இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேணும்னு தமிழ் தேசிய ஜம்பவான்கள் பேசிக்கொண்டிருக்காங்க!

