Friday, July 4, 2025
HomeSri Lankaவெள்ளைக்காரியை மயக்க மருந்து கொடுத்து நுவரேலியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளைக்காரியை மயக்க மருந்து கொடுத்து நுவரேலியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சுற்றுலா வந்த அழகான வெளிநாட்டு பெண்ணை ரொம்ப நம்பிக்கையுடன் ஓன்லைனில் வேன் புக் பண்ணினதுதான் இன்று அவளுடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது!

26 வயதான சாரா அர்ரார் என்ற அல்ஜீரிய பெண் மே 7ஆம் திகதி இலங்கைக்கு வந்தார். கண்டி, நுவரெலியா வழியாக எல்லக்குப் பயணம் செய்வதற்காக ஒரு வாடகை வேனை நம்பியே புக் செய்திருந்தார். ஆனால் அந்த நம்பிக்கை தான்… வாழ்நாளில் மறக்க முடியாத மர்மத்தை உருவாக்கிவிட்டது!

அந்த ஓட்டுநர் – 70 வயதான ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி!
வேனை ஓட்டிவந்த அவர், நுவரெலியாவில் இருந்தபோதே பெண்ணுக்கு பழ பானத்துடன் மயக்க மருந்து கலந்துவிட்டார். சுயநினைவை இழந்த பெண்மணி, என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மயங்கிக்கிடந்தார்…

அதை தொடர்ந்து வேனை ராவண எல்ல அருகே ஒரு பாதுகாப்பற்ற இடத்திற்கு ஓட்டிச் சென்ற ஓட்டுநர், அந்த பெண்ணை வாகனத்திலிருந்து வெளியே தூக்கி 30 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டார்! 😨

இது மட்டும் இல்லாமல், ரூ.800,000 மதிப்புள்ள பெண்ணின் உடமைகளை எடுத்து, இடம் கலைந்து போனார்!

ஆனால் அதிர்ஷ்டவசமாக, படுகாயங்களுடன் அந்த பெண் பல கிலோமீட்டர் நடந்து எல்ல பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார். தற்போது பதுளை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், எல்ல பொலிஸார், ஓய்வுபெற்ற அதிகாரியை கைது செய்துள்ளதோடு, ரூ.500,000 மதிப்புள்ள இரண்டு மொபைல்களையும், அந்த வேனையும் மீட்டுள்ளனர்.

மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments