சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
நண்பனின் தந்தைக்கு சொந்தமான வெறும் காணி தில்லைவயல் பகுதியில் இருந்தது, தந்தையார் வெளிநாடு சென்றமையால், இவனும் அந்தக் காணியை சென்று பார்ப்பதில்லை,
ஒரிரு வருடங்கள் கழிய, தந்தையார் நாடு திரும்பி காணியைச் சென்று பார்த்த போது, காணியை சுற்றி மதில் கட்டி, வாசலில் பெரிய கேற்றும் போட்டு அதற்கு பூட்டும் போடப்பட்டிருந்தது.
சற்று நிலைதடுமாறி சுற்றுப்பகுதியில் “என் காணிக்கு என்ன நடந்தது? யகர் இப்படி பண்ணின என்று கேட்க, அனைவரும் காணியின் பக்கத்து வீட்டுக்காரரை கைகாட்டினர்.
அவரை கூப்பிட்டு விசாரித்த போது, தனக்கு இந்த காணியை ஒருவர் விற்றதாகவும் வாங்கியதாகவும் கூறினார்.
உறுதியைக் பார்த்தால் அது வெளிப்படுத்தல் உறுதி. இதில் என்ன ஜோக் என்றா, பக்கத்து காணிக்காரருக்கு இந்தக்காணி யாருடையது என்று நன்றாக தெரியும்,
இருந்தும் பக்கத்து காணி, விலை குறைவு அதைவிட காணிக்காரன் வெளிநாடு போட்டார் என்ற துணிவில் கள்ள உறுதி போடப்பட்டிருக்கு என்று தெரிந்தும் வாங்கியுள்ளார்.
இப்போது கோர்ட்ஸில கேஸ்.காணியை விற்றவர், யாழ்ப்பாணத்தில் கள்ள காணிகள் பிடித்து விற்கும் வெளிப்படையான காணி கள்ளன்.
ஓட்டுமடம், பொம்மைவெளி, கோம்பையன் மணல் இந்து மயானத்து முன்னால் உள்ள காணிகளில் பெரும்பாலானவை இந்த ஒரு தனிநபரால் வெளிப்படுத்தல் உறுதி (கள்ள உறுதி) முடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டுள்ளது. ஏராளமான வழக்கு உண்மையான காணிக்காரர்களால் நீதிமன்றில்.
உறுதி முடித்த லோயர், கள்ளக்காணி பிடிக்கும் நபர், புரோக்கர்ஸ் என்று பெரிய மாபியா கும்மலே இதில் உள்ளது, சரியான நடவடிக்கைகள் மூலம் இந்தக் கும்பல்களைப் பிடித்தால், பல காணிகள் தப்பும்.
இதில் ருசி கண்டதன் வெளிப்பாடே, கோம்பையன் மணல் குளமும் அதனுடை நீர் வடிககலமைப்பையும் மண் நிரவி சூறையாடும் செயற்பாடும்.
ஒரு நபர், ஒரே லோயர்.
“எவ்வளவோ செய்திட்டம், அரச காணியையும் ஆட்டையை போடுவம் என்ற துணிவு”
யாழ்ப்பாணத்தில் 30 இலட்சத்துக்கு குறைய எங்கும் மேட்டுக் காணிகள் இல்லை. இதனால் இப்படியான வயல் காணிகள் மலிவு விலையில் கிடைக்கின்றது என வாங்குவதற்கு சில முட்டாள்கள் முன்வருவதால் கள்ள காணி மாபியாக்களின் பிஸ்னஸும் ஜோராக நடக்கின்றது.
இதில் இன்னுமொரு அசிங்கம் என்னவென்றால், வயல் காணிகளை அதுகும் கள்ள உறுதி முடிச்ச காணியை மண் நிரவி மேட்டு காணிகளாக்க, அனுமதியும் வழங்கின்றமை தான்.
கட்டிடம் கட்ப அனுமதி, மின்சாரம் வழங்க அனுமதி என்று பல அனுமதிகள் நீண்டு செல்கின்றன.
அரச திணைக்களங்கள் ஆவணங்களை சரியாக பரிசோதிப்பதில்லையா? அல்லது பணத்தாள் ஆவணம் இருந்தால் மற்றைய ஆவணங்களை கண்டு கொள்ளாமல் அனுமதி வழங்குகின்றனரா?
வெளிப்படுத்தல் உறுதி மூலம் கள்ளமாக காணி பிடிக்கும் பிரச்சினை பாரிய பூதாகரமாக யாழ்ப்பாணத்தில் இருக்கின்றது, எவரும் கண்டுப்பதாக தெரியவில்லை, தங்கள் காணிகளுக்குள் பிறிதொருவன் மண் போட்டு கட்டிடம் கட்டும் போதே இதன் தார்ப்பர்யம் உணர்வார்கள் போல!

