சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்..
ஜெகதீஸ்வரன் சத்குணதேவி அவர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) அமைப்பாளராக பணியாற்றுகிறார். இப்போது வடமராட்சி கிழக்கு பகுதியில் போட்டியிட அவர் வேட்பாளராக இருந்தார், ஆனால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இரு நாட்கள் முன்னர், மருதங்கேணி காவல்துறையினரால் இன்று காலை வேட்பாளர்களுக்காக நடத்தப்படவிருந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வேட்பு மனுக்கள் ஏற்கப்படவில்லை என்பதால், அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இன்று காலை சுமார் அரைமணிநேரத்திற்கு முன்னர், மருதங்கேணி காவல்துறையினர் அவரது இல்லத்திற்கு வந்து, கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்று கேட்டுள்ளனர். அவர் வேட்பாளர் அல்லவென்று விளக்கியதும், “அனுப்பினால் வரணும்” எனக் கூறி, அவரின் உடல் நலம் குன்றிய மகனை காரணமில்லாமல் கைது செய்துள்ளனர்.
சற்குணதேவி அவர்கள் நேர்மையும் தமிழ் அரசியலையும் பின்பற்றும் ஒருவராக, மருதங்கேணி காவல்துறையால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகிறார். அவரின் கணவர், மகன் மற்றும் த.த,ம மு கட்சியினைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் மீதும் போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன.
இந்தத் தொடர் அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை.