HomeSri Lankaயாழில் குளத்தில் மூழ்கி சிலுசன் பலி!!

யாழில் குளத்தில் மூழ்கி சிலுசன் பலி!!

யாழ்ப்பாணம், வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்பவராவார்.

வியாழக்கிழமை (17) நண்பர்களுடன் புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சுமார் எட்டுப் பேர் அடங்கிய நண்பர்கள் சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய போது மேற்படி இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு வரணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments