இந்த யாழ் மண்டேலாவை பற்றி நீண்டநாட்களாக நாங்க கதைக்கவில்லை பாருங்கோ! அவர் செய்த பழிவாங்கல்களை மீட்பர் ஒருவர் வந்ததாக கருதி கொண்டாடிய அனைவருக்குமாக அவர் செய்த சேவைகளை (திருவிளையாடல்களை) ஒரு மண்டேலா தொடராக தரலாம் எண்டு நினைக்கிறன்.
அவர் கொழும்பில் உள்ள ஒரு போதனா வைத்தியாசலையில் உள்ளக விடுதி வைத்தியராக கடமையற்றிய வேளையில் அவரின் கடமையுணர்ச்சி மேலீட்டினால் தாமதமாகவே கடமைக்கு வருகை தந்து டெங்கு நோயாளர்களை காலதாமதமாகவே பார்வையிடுவது வழக்கம். இதனால் ஒரு தடவை கோபம் அடைந்த விடுதி வைத்திய நிபுணர் சற்று கடுமையாக அவரது பாஷையில் அவரை கொஞ்சி விட்டார்.
இதனால் மனமுடைந்த எமது மண்டேலா சோகமாக இருந்தார். இதனை கண்டு மனமிரங்கிய ஒரு முதுகலை பயிற்சி(Registrar) வைத்தியர் இவரை தேற்றுவதற்காக அந்த வைத்திய நிபுணர் பிசு ( பைத்தியம் ) தான் என்று பலவாறாக இவரை தேற்றியுள்ளார்.
பிற்காலத்தில் எமது மண்டேலா தான் நோயாளிகள் மேல் உள்ள கரிசனையால் வேலை செய்வதில்லை என்பதை கண்டறிந்த அந்த முதுகலை பயிற்சி(Registrar) வைத்தியர் எமது மண்டேலாவை கண்டிக்க முற்பட்டிருக்கின்றார்.
அந்த வேளையில் எமது மண்டேலா அந்த முன்னைய ஒலிப்பதிவினை( Voice Recording)வைத்திய நிபுணருக்கு அனுப்பிவிடுவேன் எப்படி வசதி என கேட்டிருக்கிறார். பிறகென்ன அந்த ரெஜிஸ்டார் வைத்தியர் பாடு….
குறள்:
“உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.”
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.