வைத்தியர் சின்ராசு மூலமாக தனது சக வைத்தியர்களுக்கு வெட்டிய குழியில் தானே விழுந்த போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர்.
மந்திகை ஆதார வைத்தியசாலை முன்னாள் வைத்திய பொறுப்பதிகாரி ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இடமாற்றம் பெற்று சில வருடங்கள் மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இணைக்கப்பட்டு தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளராக இருக்கிறார்.
சமீப காலமாக வைத்தியத்துறையில் உள்ள ஊழல்களை வெளி கொனருவேன் என முகப்புத்தகத்தில் போராடுகின்ற வைத்தியர் சின்ராசு தான் அடித்து விட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லாமல் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். அவர் இறுதியாக குற்றம் சாட்டியது மேற்குறிப்பிட்ட பிரதி பணிப்பாளரையாகும்.
எனவே தற்போது கிடைத்த தகவல்களின்படி மேற்படி சின்ராசுவை அரசியல் பிரமுகராக மாற்றி தமிழர் பிரதேசத்தில் பிரச்சனைகளை உருவாக்க நினைக்கும் கூட்டங்களும், அதை வைத்து காசு பார்க்க நினைக்கும் கூட்டங்களும் மேற்குறிப்பிட்ட பணிப்பாளரை அணுகி உள்ளதாக தெரியவருகிறது.
அவர் தனது உற்ற நண்பனான யாழ்ப்பாணம் / சிறைச்சாலை வைத்திய அதிகாரியை விலைக்கு வாங்கி, வைத்தியர் சின்ராசுவிற்கு எப்படியாயினும் மனநோயாளி என்ற பெயரினை வாங்கிக் கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் தான் தொடர்பான ஆதாரங்கள் வெளிவரும் போது தப்பித்துக் கொள்ளலாம் என்றும், இதன் மூலம் ஏனைய சின்ராசுவின் வழக்குகளில் இருந்தும் மனநோயாளியான சின்ராசு வெளிவருவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என கணக்கு போட்டு காய் நகர்த்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வைத்தியத்துறை தகவல்கள் அடிப்படையில் துறைசார் நிபுணர்களின் நோய் நிர்ணயத்தின் முடிவின் அடிப்படையிலேயே சின்ராசு தொடர்பான வழக்குகள் நகர இருப்பதாக புதியம் இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.