HomeSri Lankaபோர்க் குற்றச்சாட்டுள்ளவர்களை தண்டிக்கோம் - ஜேவிபி உறுதி

போர்க் குற்றச்சாட்டுள்ளவர்களை தண்டிக்கோம் – ஜேவிபி உறுதி

போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களையும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களையும் தேசிய மக்கள் சக்தி தண்டிக்க முயற்சிக்காது என அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பேரில் போட்டியிடும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவே இத்தகைய அறிவிப்பினை விடுத்துள்ளார்.

புலிகளை தோற்கடித்து தமிழ் மக்களது போராட்டத்தை முடக்கியதற்கு கோத்தபாயவை விட தாங்களே முக்கிய பங்காற்றியிருந்ததாக ஜேவிபி தெரிவித்துவருகின்றது.கட்சியின் தலைவர்கள் பலரும் பிரச்சார கூட்டங்களில் அதனை பகிரங்கமாக கூறிவருகின்றனர்.

கிராமம் கிராமமாக ஜேவிபியினர் முன்னெடுத்த பிரச்சாரங்கள் காரணமாகவே சிங்கள இளைஞர்கள் படைகளில் இணைந்து தமிழருக்கு  எதிராக போராடியதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர்.

எனினும், வடக்கு கிழக்கு பகுதிகளில் பிரச்சாரங்களிள் போது தமிழ் மக்கள் மீதான படுகொலை, ஆட்கடத்தல், காணாமல் ஆக்கப்படல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என தேசிய மக்கள் சக்தி கூறிவருகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் மொழி உரிமையை பாதுகாத்தல், புதிய அரசியலமைப்பைபொன்றை கொண்டுவருதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments