நாட்டின் பொது மக்களை புறக்கணிக்காமல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அரசியல் முடிவை நாங்கள் ஒருபோதும் எடுக்கவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் அபிவிருத்தியை நிறுத்திய இடத்தில் இருந்து எவ்வாறு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதே எனது பொறுப்பும் சவாலும் என நான் கருதுகின்றேன்.
இன்று சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மிகவும் கடினமான நிலையில் உள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் வரம்பற்ற மற்றும் நியாயமற்ற வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது. கோட்டாபயவின் அரசாங்கம் வரிகளைக் குறைத்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டோம்.
இந்த நாட்டு மக்களுக்கு தாங்கிக்கொள்ளக்கூடிய வரிக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம். கிராம பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன், வரிய மனிதருக்கான பொருளாதாரத்தை உருவாக்குவோம்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை உங்களுக்காக கட்டியெழுப்ப ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளது. ” என்றார்.