HomeSri Lankaகந்தர்மட விபத்தில் போதையிற்காக பலூன் பரிசோதனை செய்யப்பட்டவர் இவர் தான்!

கந்தர்மட விபத்தில் போதையிற்காக பலூன் பரிசோதனை செய்யப்பட்டவர் இவர் தான்!

நேற்று முந்தினம் கந்தர்மடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் என அரச இலச்சனையுடன் பலகையிடப்பட்டு விபத்துக்குள்ளான வாகனத்தினை செலுத்தியதாக பொலிஸாரினால் போதையிற்காக பலூன் பரிசோதனை செய்யப்பட்டவர் இவர் தான்.

ஆனால் ஊடாக செய்திகளின் பிரகாரம் சாரதியும் அவரின் நண்பரும் வைத்திய சாலையில் அனுமதி என்று.

குறித்த நபர் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் முன்னாள் மேலதிக அரசாங்க அதிபரும் தற்போதையGA ஆகிய பிரதீபனின் புதல்வன் என்பதுடன் அக்காலப்பகுதியில் பொது நிர்வாக அமைச்சின் செயலரின் அனுமதியுடன் சொந்த வாகனத்தினை உத்தியோக பூர்வ வாகனமாக அனுமதி பெற்று எரிபொருள் செலவுடன் இந்த வாகனத்தை பயன்படுத்த மாதாந்தம் ரூபா.50.000.00 அரசிடம் கொடுப்பனவாகப் பெற்றுள்ளார்.

எனினும் பதவி மாற்றத்தால் அவருக்கு அரச வாகனம் வழங்கப்பட்ட நிலையில் குறித்த அரச உத்தியோகத்தரின் மகன் பதவி பெயரிடப்பட்ட அரச இலச்சினை கொண்ட வாகனத்தினை பயன்படுத்தி வந்திருக்கிறார்.

இப்படியான வாகனங்களை பொலிஸார் மறித்து சோதனை செய்வதில்லை. தந்தையின் சொந்த வாகனத்தை பதவிப் பெயரில் பாவிக்காமல் சாதரமாக பாவித்திருக்க முடியும். குறித்த குடும்பம் குறுகிய முறையில் பிரமிட் வியாபாரத்தினை மேற்கொண்டமை யாரும் அறிந்ததே!

இந்த நிலையில் சட்டவிரோத செயற்பாட்டினை மேற்கொள்ள இந்த வாகனம் அரச இலச்சினையுடன் கூடிய பதவிப் பெயர் கொண்ட பலகையுடன் பயணிக்கிறதா?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments