பண்டாரவளை, லியன்கஹவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து காயப்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவர் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக லியன்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை, லியன்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.
7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 12 வயதுடைய மகளே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மகள் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மகளின் தாயார் தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லியன்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.