Sunday, December 22, 2024
HomeSri Lankaஎலிக்காய்ச்சல் வேட்டையால் யாழில் 23 வயது கிருசாந்தன் பலி !

எலிக்காய்ச்சல் வேட்டையால் யாழில் 23 வயது கிருசாந்தன் பலி !

சுகயீனமுற்று பருத்தித்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் அவரின் உடலில் நோய் அதிகாரிக்க யாழ் போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற குறித்த இளைஞர் நேற்றிரவு சனிக்கிழமை 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில் கரவெட்டி தல்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments