பலாங்கொடை, மத்தேகந்த, பில்லகும்புர பகுதியைச் சேர்ந்த றெக்ஷி என்ற செல்ல நாய் இறந்ததையடுத்து, சடலத்தை சவப்பெட்டியில் வைத்து குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பௌத்த பிக்கு இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு சமய வழிபாடுகளை மேற்கொண்டார்.
கடந்த 11ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.
ரெக்ஷி என்ற இந்த செல்ல நாய் சுமார் 11 வருடங்களாக அந்த வீட்டில் வசித்து வந்துள்ளது. அன்று மாலை, றெக்ஷி திடீரென உயிரிழந்ததையடுத்து, பலாங்கொடை நகரில் உள்ள ஒரு பூக்கடையில் இருந்த சிறிய சவப்பெட்டியை குடும்பத்தினர் எடுத்து வந்து சவப்பெட்டியில் நாயின உடலை வைத்துள்ளனர்.அன்றிரவு பௌத்த பிக்கு சமயச் சடங்குகளைச் செய்து, தோட்டத்தில் குழி வெட்டி, பெட்டியைப் புதைத்து, விளக்கு ஏற்றினர். இந்த இறுதிச்சடங்கில் அயலவர்களும் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர்.

