Thursday, July 31, 2025
HomeSri Lankaயாழில் கணபதிப்பிள்ளை சடலமாக மீட்பு

யாழில் கணபதிப்பிள்ளை சடலமாக மீட்பு

யாழ். வடமராட்சி, அல்வாய் மேற்கு – ஆண்டாள் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா கணபதிப்பிள்ளை (வயது 86) என்ற வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் நேற்றுக் காலையில் இருந்து கூக்குரல் இட்டவாறு இருந்துள்ளார்.

பின்னர் சத்தம் கேட்காது இருந்த நிலையில் அயலவர்களால் கிராம அலுவலர் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது மேற்படி வயோதிபர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு நேற்று இரவு சென்ற பருத்தித்துறை பதில் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன்தயான் விசாரணை செய்து உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments