சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
இதெப்படி என்றால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கும் போது, அந்த வெற்றிடத்திற்கு தற்காலிகமாக ஆட்களை வேலைக்கு எடுத்து வேலை வாங்குவது.
பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை , உள்ளூராட்சி சபைகளில் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை , வைத்தியசாலைகளில் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறைகள் நிலவும் போதே தொண்டர்களாக உள்வாங்க படுவார்கள்.
இவர்கள் தொண்டர்களாக வேலை செய்யும் கால பகுதியில் , போக்குவரத்திற்கும் , அவர்களின் சீருடைக்கும் , உணவுக்குமே வாங்கும் சம்பளம் காணாது.
அடிமைகள் போன்று குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு எடுத்து , அதிக வேலைகள் வாங்குவார்கள்.
இது எங்கள் வேலை இல்லையே என எதிர்த்து கதைக்க முடியாது. அப்படியாயின் வேலையை விட்டு போ என சொல்லி விடுவார்கள்.
மேலதிகாரிகளின் வீட்டுக்கு மரக்கறி வாங்கி கொடுப்பது முதல் , அவர்களின் வீட்டினை சுற்றம் செய்யும் வேலைகள் கூட செய்து கொடுக்க வேண்டி நிர்பந்திக்கப்படலாம்.
சரி, இவர்கள் ஏன் இப்படி கஷ்டப்படுகிறார்கள் என்றால் , என்றாவது ஒரு நாள் தமக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் என ..
இப்படி வேலை செய்ய முடியாது வேலையை விட போறேன் என சொன்னால், நாங்களும் இப்படித்தான் செய்து வந்தனாங்க என சொல்ல சிலரும் , கொஞ்ச காலத்திற்கு பல்லை கடித்துக்கொண்டு இரு நிரந்தமாக்குவாங்க என சொல்லும் சிலரும் இருப்பாங்க.
அரசியல்வாதிகள் கொஞ்ச பேர் இருப்பாங்க , இவங்க கொஞ்ச பேருடன் பேசி இந்த எலக்சனுக்கு வேலை செய்யுங்க , நான் உங்களுக்கு நிரந்தர வேலை வாங்கி தருவேன் சுயவிபர கோவைகளுடன் எத்தனை பேருக்கு வேலை வேண்டும் என்ற லிஸ்டோட வாங்க என உறுதி கூறி அவங்களை வைத்து அவங்களும் தமது அரசியல் வேலையே செய்வாங்க.
இப்படியே போகும் போது ஒரு கட்டத்தில் வெற்றிடத்தை நிரப்ப என அரசாங்கம் வெளிக்கிடும்.
அப்ப சாதாரண சித்தி வேணும் என கல்வி தகைமையை தூக்கி போடுவாங்க.. அப்ப பலருக்கு வேலை கேள்விக்குறியாகும். அதுக்கு பிறகு போராட்டங்கள் வைத்து , ஒரு மாதிரி நிரந்தர வேலை தரலாம் என சொன்னதும் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களாக வேலை செய்தவர்கள் முதல் , அரசியல் செல்வாக்கு உடையவர்கள் வரையில் அந்த தொண்டர்களுடன் தாமும் தொண்டர்களாக நிரந்தர வேலைகளை பெற்றுக்கொள்வார்கள்.
தொண்டர் ஆசிரியர்கள் என்றால் , பட்டதாரிகளாக இருக்க வேண்டும். அதுவும் அவர்கள் கற்பிக்கும் பாடத்திற்கு என கேட்பார்கள்.
சிலர் பட்டம் பெற்று இருக்க மாட்டார்கள். பட்டம் பெற்றவர்களும் கலைத்துறையில் பட்டம் பெற்ற்வர்களாக இருப்பார்கள்.
கலைத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு வெற்றிடங்கள் குறைவு. ஆங்கிலம் , கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய பாடங்களுக்கே ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படும்.
ஆக அந்த துறையில் பட்டம் பெற்றவர்கள் என பார்த்தல் குறைந்தளவானவர்களே காணப்படும். அப்ப மிகுதியானர்வகளுக்கு நிரந்தர வேலை கிடைப்பது கேள்விக்குறியாகும்.
அதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்களை முன்னெடுப்பார்கள். போராட்டத்தின் பயனாக அரசாங்கம் வேலை வழங்க முன் வரும்.
அப்ப உண்மையில் கஷ்டங்களுக்கு மத்தியில் வேலை செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும் போது , அருகில் உள்ள பாடசாலையில் பொழுது போக்காக போய் வந்தவர்கள் , அதிபரின் செல்வாக்கு உடையவர்கள் . பாடசாலையில் வாணி விழாவிற்கு நடனம் பழகியவர்கள் என கொஞ்ச பேர் தாமும் தொண்டர் ஆசிரியர்களே என அதிபரின் கடிதத்துடன் ஆசிரிய வேலைக்கு போய்விடுவார்கள்.
சரி அவர்களுக்கும் பாவம் தானே ..
(யாழ் . போதனாவில் சுகாதார தொண்டர்களாக பணிபுரிந்தவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி 2013ஆம் ஆண்டு முன்னெடுத்த போராட்டத்தின் போது எடுத்த படம்.)
நன்றி
மயூரப்பிரியன் சமூகவலைத்தளம்

