யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் விசாரணைகள் முடிவுற்றதும் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளது பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கைது சம்பவத்தில் கிராம அலுவலருக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் வேறு சிலரது வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முகநூல் பதிவுகளை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்கள்.