யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் (Ananda Krishnan) தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரது மனைவி மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன், தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் (Ananda Krishnan) மலேசியாவில் பெரிய நிறுவனங்களின் அதிபதி ஆவார். மலேசியாவின் இரண்டாவது பெரிய தொலைபேசி நிறுவனமான Maxis Bhd அவருக்குச் சொந்தம்.
ஸ்ரீலங்கா டெலிகோமிலும் அவரது பங்குகள்
அத்துடன் Astro Malaysia Holdings Bhd தனியார் ஊடக நிறுவனத்தை அவர் தோற்றுவித்தார். தொலைத்தொடர்புதுறை எரிவாயு எண்ணெய் போன்றவற்றில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் ஆனந்த கிருஸ்ணன் என்பதுடன், ஸ்ரீலங்கா டெலிகோமிலும் அவரது பங்குகள் உள்ளன.கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் (Ananda Krishnan) , யாழ்ப்பாணத்தை பூர்வீககொண்ட இவர் மலேசிய தலைநகரில் உள்ள பிரிக்பீல்டில் பிறந்தார்.
2011 இல் இவரது சொத்து 5.8 பில்லியன் டொலர் என மதிப்பிட்டிருந்த போர்ப்ஸ் சஞ்சிகை உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் இவரை இணைத்திருந்தது.
மகன் துறவற வாழ்க்கை
அதேதேவேளை ஆனந்த கிருஷ்ணனின் மகன் வென் அஜான் சிரிபான்யோ (Ven Ajahn Siripanyo) , 5 பில்லியன் டாலர் சொத்துக்களை உதறிவிட்டு துறவற வாழ்க்கையைத் தழுவியுள்ளார்.வெளிநாடொன்றில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மரணம்! | Ananda Krishnan Also Known A K Passed Away
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாய்லாந்து-மியான்மர் எல்லையில் வனத் துறவியாக வாழ்ந்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.