கொழும்பு, தெமட்டகொட பகுதியிலுள்ள வீடொன்றில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், டாக்குத்தரும் மற்றும் நேசும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுனர் ஒருவரும் மருத்துவ நிலைய தாதி ஒருவருமே நேற்று தெமட்டகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பிலியந்தலை பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது வயிற்றில் உள்ள குழந்தையின் சிறுநீரக செயலிழப்பு தொடர்பில் இந்த வைத்தியரை சந்தித்துள்ளார்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாது, எனவே அறுவை சிகிச்சை மூலம் தாயின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தால் அதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த கர்ப்பிணிப் பெண், தனது கணவருடன் தெமட்டகொடயில் உள்ள வைத்தியரின் கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.
அங்கு கருக்கலைப்பு செய்த பின் சுகவீனமடைந்த பெண் நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த பெண்ணின் கணவர் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, டாக்குத்தரையும் தாதியையும் கைது செய்து விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.