Wednesday, March 4, 2026
Home Sri Lanka படகு மோதி தந்தையும் மகளும் மாயம்!

படகு மோதி தந்தையும் மகளும் மாயம்!

நீர்கொழும்பு முன்னக்கரை களப்பு பகுதியில் சிறிய படகு ஒன்று மற்றுமொரு படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இந்த விபத்து இன்று (24) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

7 பேர் நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில் 5 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

எனினும் 50 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகளும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிர் பிழைத்த 5 பேரில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மற்றைய மூவர் மருத்துவமனையில் இருந்து வௌியேறியுள்ளனர்.

காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.