வேறு ஒரு கட்சியூடாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் இற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென கட்சியின் பதில் பொதுச்செயலாளர் டொக்டர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் இராஜிநாமாக் கடிதம் எதுவும் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை.
அதுபோலவே சசிகலா மற்றும் தவராசா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறினார்கள் என ஊடகங்களின் வாயிலாகவே அறியமுடிகின்றது. அவர்களது கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைகள் ஊடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என சொல்லப்படுகின்றது.
எனவே, இது தொடர்பாக நான் கருத்துக் கூற முடியாது. அவ்வாறான நிலைமை ஏற்ப்படுமாக இருந்தால் கட்சியின் யாப்பின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுப்போம்.
தற்போதைய களநிலவரங்களின் கொழும்பில் இம்முறை தமிழரசு கட்சி போட்டியிடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வேறு ஒரு கட்சியூடாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தமிழரசுக் கட்சியில் இருந்து முற்றாக வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கட்சியின் யாப்புக்கமைய அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.