யாழ்ப்பாணத்தில் பல மருத்துவ நிலையங்கள், மருந்தகங்கள் உரிய அனுமதி பெறாமலும் தகுதியற்ற மனித வளங்களூடாக நடாத்தப்படுகின்றது.
குறிப்பாக புத்தூர் சந்திக்கு அருகாமையில் ஆயுள்வேத சிகிச்சை நிலையம் ஒன்றில் வயது முதிர்ந்தவர்களில் என்பு தேய்வினால் உருவாகின்ற இடுப்பு வலி, முதுகுவலி, கழுத்து வலி மற்றும் விபத்தினால் ஏற்பட்ட கால்,கை வலிகளிற்கு Elastic Plaster எனும் காயங்களிற்கு மருந்து கட்டியிபின் அல்லது முறிவுகளிற்கு POP Bandage சுற்றிய பின் வெளிப்புறத்தில் அவை விழாமல் இருப்பதற்கு கட்டப்படும் அல்லது பயன்படுத்தப்படும் Elastoplaser இனை எல்லோருக்கும் ஒட்டி 1200 ருபா பெறுமதியான பொருளை பாவித்து ரூபா மூவாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை கட்டணம் அறவிடப்படுகிறது.
உரும்பிராய் பகுதியில் உள்ள சுதேச வைத்தியர் ஒருவர் அவர் நாட்பட்ட மற்றும் குறுகிய கால நோய்களுக்கு எதுவித பக்கவிளைவுகளின்றி மருந்துகளின்றி சிகிச்சை அளிப்பதாக கூறி மக்களை ஏமாற்றி வருகிறார் ஆனால் அவர் தன்னுடைய வியாதிகளுக்கு யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த மாதம் சிகிச்சை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் இலங்கையில் சுகாதார அமைச்சினால் நடைமுறையில் உள்ள சிறுபிள்ளைகளிலிருந்து வயது வந்தவர்வரை உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி நடைமுறைகளை தவறு என்று பலமுறை பொதுவெளியில் சமூக ஊடகங்களின் ஊடாக தெரிவித்தும் வருகின்றதுடன் பல சிறு பிள்ளைகளில் உள்ள பிறப்பு குறைபாடுகளை தன்னுடைய வைத்திய திறமையினால் மாற்றித் தருவதாக கூறி ஏமாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதனை நம்பி பல பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அழைத்துச் சென்று இறுதியில் நோய் தீவிரமடைந்து அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உள்ளக மருந்தகம் நடத்துவதற்குரிய அனுமதி மட்டுமே உள்ளது.இவ் வைத்தியசாலையின் உரிமையாளர் கடந்த மாதம் யாழ் விமான நிலையத்தின் ஊடாக மருத்துவ உபகரணங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வர முயன்ற போது விமான நிலையத்தில் அதிகாரிகளினால் அந்த உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் பிரபல அரசியல் கட்சியின் உறுப்பினரும் முன்பு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் என்று கூறிக் கெஞ்சியும் விமான நிலைய அதிகாரிகள் பொருட்களைக் கொண்டுவர அனுமதிக்கவில்லை. அத்துடன் இவருடைய மருந்தகத்தில் விற்கப்படும் மருந்துகளுக்கான பற்றுச்சீட்டும் விபரத்துடன் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக மருந்தகத்தில் பணிபுரியும் ஊழியர்களிற்கு மருந்துகள் பற்றிய அறிவும் அனுபவமும் இல்லாதவர்களாக உள்ளனர்.
யாழ் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இவ் விடயங்கள் சம்பந்தமாக பலரால் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட போதும் அவர்கள் எதுவித சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அசண்டையீனமாக பொறுப்பின்றி மக்கள் நலனில் அக்கறையின்றி இருந்து வருகின்றார்.
தற்பொழுது யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனையிலும் பல வைத்திய அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் கடமை புரிகின்ற போதும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை ஏனெனில் இது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுத்தால் தங்களுடைய ஊழல்கள் வெளி கொண்டுவரப்படும் என்ற அச்சம் காரணமாக நடவடிக்கைகள் எடுப்பதில் பின்னடிக்கின்றனர்.