Home Sri Lanka அருச்சுனாவின் எம்.பி பதவிக்கு ஆப்பு

அருச்சுனாவின் எம்.பி பதவிக்கு ஆப்பு

0
1

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அவருக்கு எதிராக Quo Warranto விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் தனது வைத்திய அதிகாரி பதவியை இராஜினாமா செய்யாததால் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என ஓஷல ஹேரத் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த விவகாரம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவினை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here