📌பட்டத்தோடு சேர்ந்து சைக்கிளும் பறந்த சுவாரஷ்யமான சம்பவமொன்று இன்று
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி கம்பர்மலை பிரதேசத்தில் இடம்பெற்றது.
15 அடி உயரமான பட்டம் பறக்கும் போது அதன் வாலோடு சிக்கி சேர்ந்து பறந்த சைக்கிள் சுமார் 35 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் சைக்கிளின் பின் றிம் முற்றாக நெழிந்தது.
வானத்திலிருந்து சைக்கிள் விழுவதைப் பார்த்த இளைஞர்கள் கூக்குரலிட்டனர்.
இப்போது பட்ட சீசன் களை கட்டியுள்ளதனால் வடமராட்சி வானில் பலவகையான வடிவங்களில் பட்டங்கள் இப்போது பறந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.