Friday, December 20, 2024
HomeSri Lankaகனடா விசரில் திரிந்தவர்களிடம் கோடிகளில் ஏமாற்றியவன் யார்

கனடா விசரில் திரிந்தவர்களிடம் கோடிகளில் ஏமாற்றியவன் யார்

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடி 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் நபர் ஒருவர், கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார்.அதன் முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.

குறிப்பாக ஒவ்வொருவரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை பணம் பெறப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த நபர் தமது பயணம் தொடர்பில் தகவல் வழங்காததால், இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments