வெளிநாடு செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் இருவர், முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஸ்ய இராணுவத்தின் கூலிப்படையில் இணைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர்.குருநகர் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே ரஸ்ய இராணுவ கூலிப்படையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
முகவர்கள் அவர்களை ஏமாற்றி ரஸ்ய இராணுவத்தின் வெளிநாட்டு கூலிப்படையில் இணைத்துள்ளதாகவும், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவர்களை மீட்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.